Home இலங்கை சமூகம் மீண்டும் துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ள நபர்

மீண்டும் துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ள நபர்

0

முல்லைத்தீவு-துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள்
எதனையும் இன்று வரை நிறைவேற்றாத நிலையில் மீளவும் பிரதேச செயலகம் முன்பாக
போராட்டதில் ஈடுபடவுள்ளதாக நபரொருவர் தெரிவித்துள்ளார்.

இன்று(21) கிளிநொச்சியில் வைத்து குறித்த நபர் மேற்படி விடயத்தினை
தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், கடந்த 11.08.2025 காலை
முதல் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து நீதி கோரி துணுக்காய் பிரதேச செயலகம்
முன்பாக தான் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டேன்.

உண்ணாவிரத போராட்டம்

இதன்போது அவ்விடத்திற்கு வந்த
பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லத்தம்பி
திலகநாதன் சம்பவ இடத்திற்கு நேரடியாக வருகை தந்து, துணுக்காய் பிரதேச
செயலாளருடன் கலந்தாலோசித்துவிட்டு மாவட்ட செயலாளருடனும் உரையாடிவிட்டு
உண்ணாவிரதம் அதன் பின்னர் வாக்குறுதியளித்தமையால் போராட்டத்தினை நிறுத்தியிருந்தேன்.

ஆனாலும் அவர் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றாமையினால்
மீளவும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரித்துள்ளார்.

கோரிக்கை

அதாவது துணுக்காய் பிரதேச செயலகம் தனியார் முதலாளிகளிடம் இருந்து இதுவரை
இலஞ்சமாக பெற்ற பொருட்கள் அனைத்தையும் மீள கையளிக்க வேண்டும்.

பிரதேச செயலக
ஆளுகைக்குள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
முன்வைத்தே அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version