கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளை இந்தோனேசியாவில் கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட ரகசிய நடவடிக்கை குறித்த தகவல்களை சில காவல்துறை அதிகாரிகள் கசியவிட்டதாக புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜகார்த்தாவில் நடத்த திட்டமிடப்பட்ட சோதனை குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த குற்றவாளிகள், தங்கியிருந்த பிரமாண்ட குடியிருப்பிலிருந்து திடீரென வேறு இடத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
ஆனால், இலங்கை மற்றும் இந்தோனேசிய காவல்துறை குழுக்கள் இணைந்து ஐந்து மணி நேர கண்காணிப்பின் பின்னர் சந்தேகநபர்களை கைது செய்தனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், குற்றவாளிகள் முன்கூட்டியே நடவடிக்கையை அறிந்திருந்தமை உள்ளக தகவல் கசிவு காரணமாக இருக்கலாம் என புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.
அத்துடன், குறித்த தகவல் நேரடியாக கும்பலுக்கு செல்லாமல் தற்போது துபாயில் மறைந்திருக்கும் இடைத்தரகர் ஒருவரின் மூலம் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
