Home இலங்கை சமூகம் மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம்

மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம்

0

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றையதினம்(05) செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு
கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இந்த போராட்டம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி “செம்மணி புதை குழிக்கு நீதி
வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிக்குளை மறைக்காதே, எங்கே எங்கே
உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்” என கோஷமிட்டவாறு
போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ளனர்.

இதில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசிய
பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின்
செயற்பாட்டாளர் மு.கோமகன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version