Home இலங்கை அரசியல் இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் சற்றுமுன்னர் ஆரம்பம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் சற்றுமுன்னர் ஆரம்பம்

0

இன்றைய (05.06.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் ஆரம்பமாகியுள்ளன.

காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை11.30 முதல் மாலை 5.00 வரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/T8emLpjP8wM

NO COMMENTS

Exit mobile version