Home இலங்கை சமூகம் ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்காக திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்காக திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

0

திருகோணமலை – கந்தளாய் வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட, தி/கந்/கெமுனுபுர விஜித வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்தமைக்காக பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த போராட்டமானது, இன்று (16) கண்டி – திருகோணமலை பிரதான வீதியின் 97ஆம் கட்டை சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 வலயக் கல்வி அதிகாரிகள் 

ஆசிரியரை இடமாற்றம் செய்வதை கண்டித்து குறித்த பாடசாலை மாணவர்களின்
பெற்றோர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 

இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்ட இடத்துக்கு வலயக் கல்வி அதிகாரிகள் விஜயம் செய்து, இது
தொடர்பில் பதிலளிப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version