Home சினிமா கடத்தப்பட்ட சீரியல் நடிகை சைத்ரா.. அதிர்ச்சி சம்பவம்

கடத்தப்பட்ட சீரியல் நடிகை சைத்ரா.. அதிர்ச்சி சம்பவம்

0

பெங்களூரை சேர்ந்த பிரபல நடிகை சைத்ரா என்பவர் கடத்தப்பட்டதாக அவரது சகோதரி பதிவு செய்து இருக்கும் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை சைத்ரா கன்னட சின்னத்திரையில் நடித்து வருபவர். அவர் கணவர் ஹர்ஷவர்தன் தயாரிப்பாளராக இருக்கிறாராம். 2023ல் திருமணம் நடந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் சைத்ரா.

கடத்தல்

சைத்ராவை அவரது கணவர் ஹர்ஷவர்தன் தான் கடத்தி சென்று இருக்கிறாராம். மைசூருக்கு ஷூட்டிங் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சைத்ரா சென்ற நிலையில், அவரை ஹர்ஷவர்தன் ஆட்கள் காரில் கடத்தி சென்று இருக்கின்றனர்.

கடத்தப்பட்டு பல மணி நேரத்திற்கு பிறகு சைத்ரா எப்படியோ அவரது நண்பருக்கு போன் மூலம் தெரிவித்து இருக்கிறார். அவர் சைத்ரா குடும்பத்திற்கு தகவல் சொல்ல, அவர்கள் போலீசில் புகார் அளித்து இருக்கின்றனர்.

கடத்தல் காரணம்

அதன் பின் சைத்ராவின் அம்மாவுக்கு போன் செய்த ஹர்ஷவர்தன் தங்களது ஒரு வயது பெண் குழந்தையை கொண்டு வந்து கொடுத்தால் தான் சைத்ராவை விடுவிப்பேன் என தெரிவித்து இருக்கிறார்.

குழந்தைக்காக கணவரே நடிகையை கடத்தியது பற்றி தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version