முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் (Joseph Pararajasingham) படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி வேண்டி
ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் இருந்து மாநகரசபை மண்டபம் வரை இன்று (25) குறித்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பில் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய
கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.
நீதி கோரி ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகரசபை முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்து
கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தையடுத்து படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி பலரும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
