Home இலங்கை சமூகம் இன்றும் தொடரும் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம்

இன்றும் தொடரும் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம்

0

அதிபர், ஆசிரியர்களின் சுகயீன
விடுமுறைப் போராட்டம் இன்றும் தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன்
அறிவித்துள்ளார்.

“அதிபர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வை
வழங்காது, தமக்குக் கிடைக்க வேண்டியதை கேட்கும் அதிபர்கள், ஆசிரியர்களின்
ஜனநாயக ரீதியான இன்றைய போராட்டத்தை நசுக்க, நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும்
கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசி, அதிபர்கள், ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட
மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்திய ரணில் – ராஜபக்ஷ அரசின் அடக்குமுறையைக்
கண்டித்து நாளைய தினம் 27 ஆம் திகதி அதிபர்கள், ஆசிரியர்களின் சுகயீன
விடுமுறைப் போராட்டம் தொடரவுள்ளது.”

“அதிபர்கள், ஆசிரியர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டிக்கும் விதமாக இன்று போல்
அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இன்றையதினமும் ஆதரவு வழங்க வேண்டும்
என்று கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றும் ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/protest-of-principals-and-teachers-continues-today-1719445701

NO COMMENTS

Exit mobile version