Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்

மட்டக்களப்பில் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்

0

மட்டக்களப்பில் (Batticaloa) வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் வீதிக்கு இறங்கி போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.

குறித்த போராட்டமானது, மட்டக்களப்பு, காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் இன்று (03.07.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் பின்னர் பட்டதாரிகளான மாணவர்களுக்கு அரச நியமனத்தினை வழங்க கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை வங்கி ஊழியர்கள்

அதேவேளை, மட்டக்களப்பில் இன்று இலங்கை வங்கி (BOC) உழியர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்க்கைச் சுமை அதிகரித்திருப்பதால் சம்பள உயர்வை கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/protests-in-batticaloa-today-1720021575

NO COMMENTS

Exit mobile version