மன்னார் (Mannar) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை கோரி அமைதிவழி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (24.04.2024) மன்னார் மாவட்ட
செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சம்பள உயர்வு, மேலதிக நேர கொடுப்பனவு, பதில் கடமை, காகிதாகி செலவுகள் உள்ளடங்களாக
பல்வேறு கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதில் பல வருடங்களாக நீடித்து வரும்
இழுபறி நிலையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கண் வைத்தியசாலை இளம் வைத்தியர் திடீர் மரணம்
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
மேலும், மாதாந்த கொடுப்பனவை அரச சுற்றறிக்கைக்கு
அமைவாக 7500 ரூபாய் அதிகரித்து வழங்கு, வெளிக்கள கொடுப்பனவை 300இல் இருந்து
3000 ரூபாவாக அதிகரி, போன்ற பல்வேறு
வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு உத்தியோகத்தர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், 11 வருடங்களுக்கு அதிகமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு பிரச்சினைகளை
எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இதுவரை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
அதிரடிப்படையின் விசேட பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வருகைதந்த நீதிபதி இளஞ்செழியன்
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வி.பி.எஸ்.டி பத்திரண பதவியேற்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |