Home இலங்கை சமூகம் நிரந்தர காணி கோரி வவுனியாவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

நிரந்தர காணி கோரி வவுனியாவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

0

வவுனியா, செட்டிக்குளம், மெனிக்பாம் பிரதேச மக்கள் நிரந்தர காணி கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (11.10.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செட்டிக்குளம், மெனிக்பாம் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டு நீண்டகாலமாக
வசித்துவரும் உபகுடும்பங்களே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

70க்கும் மேற்பட்ட உப குடும்பங்கள்

இந்த பிரதேசத்தில் வாழும் 70க்கும் மேற்பட்ட உப குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 8 வருடங்களுக்கு மேலாக உறவினர்கள் வீடுகளில் வசித்து வரும் இவர்களுக்கு
காணி தருவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ள போதும் இதுவரை தரவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/public-demonstration-in-vavuniya-1728601105

NO COMMENTS

Exit mobile version