இரண்டு வணிக கப்பல்களளை நேரடியாவும் கடுமையாகவும் தாக்கியதாக ஹவுதி செய்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரீ (Yahya Saree) அறிவித்துள்ளார்.
முதல் தாக்குதலாக 11 பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு ட்ரோன்களுடன் ஒலிம்பிக் ஸ்பிரிட் என்று அழைக்கப்படும் அமெரிக்க எண்ணெய் கப்பலை குறி வைத்து தாக்கியதாக அவர் தெரிவத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இந்தியப் பெருங்கடலில் செயின்ட் ஜான் என்ற கப்பலை, இறக்கைகள் கொண்ட ஏவுகணை மூலம் குறிவைத்து தாக்கியதாகவும் யாஹ்யா சாரீ குறிப்பிட்டுள்ளார்.
ஹவுதி தாக்குதலின் நோக்கம்
எனினும், குறித்த தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்க தரப்பிலிருந்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஹவுதிகள், இஸ்ரேலிய தொடர்புகளைக் கொண்ட வணிக மற்றும் இராணுவக் கப்பல்கள் மீதான அவர்களின் தாக்குதல்களை பலஸ்தீனிய மற்றும் லெபனான் எதிர்ப்புகளுக்கு ஆதரவாகவும், குழுவிற்கு எதிரான அமெரிக்க பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுப்பதாகவும் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.