Home இலங்கை அரசியல் வடக்கு கிழக்கில் முப்படை வசமுள்ள மக்கள் காணிகள் – சபையில் தமிழ் எம்.பி. கோரிக்கை

வடக்கு கிழக்கில் முப்படை வசமுள்ள மக்கள் காணிகள் – சபையில் தமிழ் எம்.பி. கோரிக்கை

0

வடக்கு கிழக்கில் முப்படைகளால் அபகரிக்கப்பட்ட உள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என ரெலோ தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikkalanathan) வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், முப்படைகள் மக்களின் காணிகளை அபகரிக்கும் விடயத்தை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

நேற்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கருத்துத் தெரிவிக்கையில் குறித்த விடயத்தை செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்த விடயத்தை தாம் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் வாசஸ்தலங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானங்களையும் தாம்  வரவேற்பதாக அவர் கூறினார்.

இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற வேண்டும் எனவும் எதிர்வரும் தேர்தலுக்கான யுக்தியாக இந்த விடயங்கள் அமைந்து விடக்கூடாது என்றும்
அரசாங்கத்தைச் செல்வம் அடைக்கல
நாதன் வலியுறுத்தினார்.
 

மேலும், தூய்மையான ஒரு திட்டத்தை முன்னெடுக்கும் அரசாங்கம் பலதரப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்தும் போதே இந்த திட்டத்தில் வெற்றியடைய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.  

NO COMMENTS

Exit mobile version