Home இலங்கை சமூகம் வடக்கு காணி – அரசியல் கைதிகள் விடுதலை – தேசிய மக்கள் சக்தி எம்.பி கருத்து

வடக்கு காணி – அரசியல் கைதிகள் விடுதலை – தேசிய மக்கள் சக்தி எம்.பி கருத்து

0

விடுக்கப்படாத காணிகளை மிக விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe) தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் சுமைகளை குறைப்பதே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கு மிகப்பெரிய சுமை

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு மற்றும் மலையக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்
கொடுத்துள்ளனர்.

கடந்த கால அரசாங்கங்கள் இவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கவில்லை. இவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளமையானது நாட்டுக்கு மிகப்பெரிய சுமையாகும்.

காணிகளை விடுவிக்குமாறு இந்த மக்கள் நீண்டகாலமாக கோரிவருகின்றனர். எவ்வித வழக்குகளும் இல்லாது அரசியல் கைதிகளை நீண்டகாலமாக தடுத்து வைத்துள்ளனர்.

பாரிய மக்கள் ஆணைகள்

இந்தப் பிரச்சினைகளை மிக விரைவாக தீர்க்கும் தேவை அரசாங்கத்துக்கு உள்ளது.

எனவே, வடக்கு மக்களின் காணி பிரச்சினை என்பது நீண்டகாலமாக தீர்க்கப்பாடதுள்ள பிரச்சினை என்பதுடன், விரைவாக தீர்க்க வேண்டிய பிரச்சினையுமாகும். நாம் அதனை வேகமாக செய்வோம்.

யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச என அனைவருக்கும் பாரிய மக்கள் ஆணைகள் கிடைக்கப்பெற்றன.

ஆனால், நாட்டு மக்களின் பிரச்சினைகளை எவராலும் தீர்க்க முடியாது போனது. நாம் மக்களின் பிரச்சினைகளை தீர்வே வந்துள்ளோம். அதனால் அந்தப் பணியை நிச்சயமாக செய்வோம் என சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe) தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version