Home உலகம் இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

0

இஸ்ரேல் (Israel) பிரதமர் நெதன்யாகுவுக்கு (Benjamin Netanyahu) பிடியாணை பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ((International Criminal Court) உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டிற்கு எதிராகவும் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் போர் குற்றங்கள் நடந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே இது தொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

அந்த வழக்கில் இப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அதேபோல இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டிற்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உதவி

பலஸ்தீன (Palestine) மக்களின் போர் மரணம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த விளக்கங்களை நிராகரித்த சர்வதேச நீதிமன்றம், போர் தொடர்பாக இஸ்ரேல் அரசின் அறிக்கைகளையும் நிராகரித்துள்ளது.

மேலும், மருத்துவ உதவிகளைப் புறக்கணித்து, குழந்தைகள் உட்பட பல உயிரிழப்புகளை இஸ்ரேல் ஏற்படுத்தியதாகச் சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த இரு இஸ்ரேல் தலைவர்கள் மட்டுமின்றி ஹமாஸ் தலைவர் முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரிக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version