Home இலங்கை அரசியல் வாக்குக் கேட்டு வந்தால் தாக்குவோம்! அரசியல்வாதிகளை எச்சரிக்கும் கிராம மக்கள்

வாக்குக் கேட்டு வந்தால் தாக்குவோம்! அரசியல்வாதிகளை எச்சரிக்கும் கிராம மக்கள்

0

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க கோரி தமது கிராமத்துக்கு வரும் வேட்பார்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என மாத்தளை – நாவுல, அடவல கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதி மக்கள் தமது எச்சரிக்கையை விளம்பரங்களாக காட்சிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வாக்குறுதிகள்

தங்கள் கிராமத்துக்கு செல்லும் வீதிகள், விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினைகள், போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால், இம்முறை தேர்தலை தங்கள் கிராம மக்கள் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு வருகை தந்த அரசியல்வாதிகள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகள் தங்கள் கிராமத்திற்கு வரவேண்டாம் என்றும் அவ்வாறு வந்தால் தாங்கள் பதில் சொல்லத் தயார் என்றும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version