இலங்கையின் இறக்குமதிகள் ஏற்றுமதி வருமானத்தைக்காட்டிலும் அதிகரித்துள்ளதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சென்மதி நிலுவை பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக, முன்னணி சோசலிசக்
கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட கூறியுள்ளார்.
அந்நிய செலாவணி ஓட்டம்
இந்த நிலையில், அந்நிய செலாவணி ஓட்டங்களில் நிலைத்தன்மை இருப்பதாக ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்க கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் புபுது ஜாகொட
தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இறக்குமதிகளுக்கான செலவு கடந்த ஆண்டின்
இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி வருமானம்
எனினும் ஏற்றுமதி வருமானம், 7.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது என்றும், நிதி
அமைச்சக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என புபுது ஜாகொட
குறிப்பிட்டுள்ளார்.
