Home இலங்கை சமூகம் மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் அரசின் முக்கிய அறிவிப்பு

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் அரசின் முக்கிய அறிவிப்பு

0

03 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்கும் கொள்கையின் ஒரு படியாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என அரச தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி (Kumara Jayakody) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 

நேற்று (17) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தில் 20% குறைப்பை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

அதன்படி, அந்த பரிந்துரைகளை வலுசக்தி அமைச்சகத்திற்கு வழங்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (Public Utilities Commission) நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version