Home இலங்கை குற்றம் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து தொழில் பெற்றுக்கொண்டுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள்

போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து தொழில் பெற்றுக்கொண்டுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள்

0

சமுர்த்தி உத்தியோகத்தர்களில் 363 பேர் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து தொழில் பெற்றுக் கொண்டுள்ளமை தேசிய கணக்காய்வு நாயகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட கோப்புகளை பரீட்சித்துப் பார்க்கும் போது இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களில் 77 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 20 பேர் இழப்பீடு பெற்றுக் கொள்ளும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் பதவி விலகியுள்ளனர்.

முறைகேடான வகையில் சம்பளம்

ஹம்பாந்தோட்டையில் அவ்வாறான 30 உத்தியோகத்தர்களுக்கு 195 மில்லியன் ரூபாவும், மொனராகலை மாவட்டத்தில் அவ்வாறான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 04 பேருக்கு நான்கு மில்லியன் ரூபாவும், கொழும்பு மற்றும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 17 பேருக்கு 2023ம் ஆண்டில் மட்டும் 8.7 மில்லியன் ரூபாவும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அரசாங்க தாபனக் கோவை விதிமுறைகளின் பிரகாரம் குறித்த உத்தியோகத்தர்களிடம் இருந்து அவர்கள் முறைகேடான வகையில் சம்பளமாகப் பெற்றுக் கொண்ட அரசாங்க நிதியை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று தேசிய கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் அறிக்கையில் தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version