Home இலங்கை சமூகம் லொத்தர் சீட்டுகளை அச்சடிக்கும் உரிமை தனியார்மயம்: அமைச்சரவை அங்கீகாரம்

லொத்தர் சீட்டுகளை அச்சடிக்கும் உரிமை தனியார்மயம்: அமைச்சரவை அங்கீகாரம்

0

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு கணனி அடிப்படையிலான லொத்தர் சீட்டுகளை அச்சடித்து வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சர்கள் சபையால் குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொள்முதல் செயல்முறை

லக்ன வாசனாவ, அத கோடிபதி, சனிதா, சுப்பர் பவுல், ஜயோதா, கப்ருக சசிரி ஆகிய லொத்தர் சீட்டுகளை கணினி அடிப்படையிலான குலுக்கல்களுக்கான சீட்டுகளை அச்சடித்து வழங்குவதற்கு தேசிய போட்டி கொள்முதல் செயல்முறை பின்பற்றப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கமையஇ அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரை மற்றும் கொள்முதல் மேல்முறையீட்டு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில், லொத்தர் சீட்டுகளை அச்சடித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒரு வருட காலத்திற்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   

NO COMMENTS

Exit mobile version