அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் பெரிய அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. டிசம்பர் 5ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது முன்பதிவிலேயே முதல் நாள் ஷோக்களுக்கு மிகப்பெரிய தொகை வந்திருக்கிறது என கூறப்படுகிறது. ஹிந்தியில் மட்டும் தற்போது வரை 1.16 லட்சம் டிக்கெட்டுகள் விற்று இருக்கிறதாம்.
முதல் நாள் வசூல் கணிப்பு
புஷ்பா 2 மொத்தம் 3000 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் ஆக இருக்கிறது. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் புஷ்பா 2 படம் 250 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.
விமர்சனங்களை பொறுத்து அடுத்தடுத்த நாட்களின் வசூல் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.