Home சினிமா படுதோல்வியடைந்த புஷ்பா 2.. விளக்கம் கொடுத்த முக்கிய நபர்

படுதோல்வியடைந்த புஷ்பா 2.. விளக்கம் கொடுத்த முக்கிய நபர்

0

புஷ்பா 2

அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் புஷ்பா 2. இப்படம் உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், பலரும் இது எந்த அளவிற்கு உண்மையென கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் கேரளாவில் படுதோல்வியை சந்தித்துள்ளதாம். இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் நன்றி தெறிக்கும் விழாவில், கேரள விநியோகஸ்தர் விளக்கம் கொடுத்துள்ளார்.

விளக்கம் கொடுத்த விநியோகஸ்தர்

அவர் பேசுகையில், புஷ்பா 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாவும், அங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு கூட கிடைக்காத அளவிற்கு வரவேற்பு கிடைத்ததாகவும் கூறினார். ஆனாலும், புஷ்பா 2 ஒரு வழக்கமான மலையாள பாணியில் உருவான படம் அல்ல, அதனால்தான் கொஞ்சம் தாமதமாக இணைப்பை ஏற்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

வசமாக அண்ணாமலையிடம் வாங்கி கட்டிக்கொண்ட விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

மேலும் தற்போது இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் அதிகமானோர் பார்த்து வருவதாக தெரிவித்த அவர், விரைவில் இப்படத்தை மீண்டும் முப்பரிமாண பதிப்பில் அங்கு வெளியிடுவோம் என்றும் கூறினார்.

கேரளாவில் புஷ்பா 2 படம் தோல்வியடைந்தது குறித்து அவர் பேசியது ஓரளவு தெளிவு கிடைத்தாலும், முழுமையாக கிடைக்கவில்லை. மேலும் முப்பரிமாணப் பதிப்பு வெளியீடு குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version