Home சினிமா புஷ்பா 2 முன்பதிவிலேயே இத்தனை கோடியா.. விஜய், அஜித் கூட நெருங்க முடியாத வசூல்

புஷ்பா 2 முன்பதிவிலேயே இத்தனை கோடியா.. விஜய், அஜித் கூட நெருங்க முடியாத வசூல்

0

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் பற்றி தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதல் பாகம் பெரிய அளவில் வசூலித்த நிலையில் இரண்டாம் பாகம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

புஷ்பா 2 நிச்சயம் 1000 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

முன்பதிவிலேயே 100 கோடி

புஷ்பா 2 படம் முன்பதிவிலேயே 100 கோடி வசூல் சாதனையை படைத்து இருக்கிறது. அதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

ரிலீசுக்கு இன்னும் இரண்டு தினங்கள் இருப்பதால் இந்த தொகை இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

விஜய்யின் லியோ படம் ப்ரீ புக்கிங்கில் சுமார் 90 கோடி வரை பெற்று இருந்தது. அதை எல்லாம் ஓவர்டேக் செய்து சாதனை படைத்திருக்கிறது புஷ்பா 2.
 

NO COMMENTS

Exit mobile version