Home சினிமா அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் OTT ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனையானதா?.. அடேங்கப்பா

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் OTT ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனையானதா?.. அடேங்கப்பா

0

புஷ்பா 2

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2.

முதல் பாகம் ரிலீஸ் ஆகி 3 ஆண்டுகளுக்கு பிறகு 2ம் பாகம் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக உருவான புஷ்பா 2 ரூ. 1400 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

2024ம் ஆண்டில் அதிக வசூல் குவித்த படங்களில் புஷ்பா 2 படம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

புஷ்பா 2 படத்திற்காக ரூ. 300 கோடி சம்பளம் பெற்று விஜய்யை விட அதிக சம்பளம் பெற்ற நடிகராக அல்லு அர்ஜுன் வலம் வருகிறார்.

ஓடிடி ரிலீஸ்

படம் வெளியாகி 16 நாட்கள் ஆன நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது. ஜனவரி முதல் அல்லது 2வது வாரங்களில் புஷ்பா 2 படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

புஷ்பா 2 பட ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 270 கோடி கொடுத்து பெற்றுள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version