Home சினிமா வசூல் சாதனை படைத்த புஷ்பா 2.. முதல் நாளில் இத்தனை கோடியா!

வசூல் சாதனை படைத்த புஷ்பா 2.. முதல் நாளில் இத்தனை கோடியா!

0

அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா ஆகியோர் நடித்து இருக்கும் புஷ்பா 2 படம் நேற்று தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நாடு முழுவதும் 3000 தியேட்டர்களில் புஷ்பா 2 ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் முதல் நாளே நல்ல வசூல் குவித்து இருக்கிறது.

வசூல் சாதனை

ஹிந்தியில் மட்டும் புஷ்பா 2 படம் 67.5 கோடி ரூபாய் முதல் நாளில் நெட் வசூல் கிடைத்து இருக்கிறதாம். இது ஷாருக் கானின் ஜவான் பெற்ற 64 கோடி என்ற முதல் நாள் சாதனையை முறியடித்து புது சாதனை படைத்து இருக்கிறது.

KGF Chapter 2 படம் ஹிந்தியில் முதல் நாளில் 52 கோடி வசூலித்து இருந்தது. அதையும் ஓவர்டேக் செய்திருக்கிறது புஷ்பா 2.

ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் புஷ்பா 2 மொத்தம் 240 – 250 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 

NO COMMENTS

Exit mobile version