Home அமெரிக்கா போர் தொடர்பில் புடினுக்கு ட்ரம்ப் வழங்கிய அறிவுறுத்தல்

போர் தொடர்பில் புடினுக்கு ட்ரம்ப் வழங்கிய அறிவுறுத்தல்

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் உக்ரைனை ஆக்கிரமிக்க முயல வேண்டாம் என தான் அறிவுறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சமூக ஊடக தொகுப்பாளர் ஜோ ரோகனின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் ஆட்சியில் இருந்திருந்தால் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றிருக்காது எனவும் அது அவசியமில்லாதது என தான் நினைப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

கிம் – ட்ரம்ப் சந்திப்பு 

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஒரு பொருட்டாக கூட புடின் மதிக்கவில்லை என கூறிய அவர், புடினுடன் தான் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உனை சிறிய ரொக்கெட் மனிதன் என விபரித்த ட்ரம்ப், அவரை சந்தித்த போது, நீங்கள் நரகத்தில் எரிக்கப்படுவிர்கள் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

நான் ஆட்சியில் இருக்கும் வரை வடகொரியாவுடன் அமெரிக்கா நல்லுறவையே பேணியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஆயுதங்களை உருவாக்குவதை விடுத்து கடற்கரைக்கு சென்று ஓய்வெடுக்குமாறு கிம் ஜொங்-உனை வலியுறுத்தியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version