Home இலங்கை சமூகம் தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்: டிரான் அலஸ் உறுதி

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்: டிரான் அலஸ் உறுதி

0

இலங்கையில் தற்போது பயன்பாட்டிலுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

அதற்கான ஒப்பந்தளிப்புகள் (tenders) திறக்கப்பட்டு, தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையில் பார் குறியீடு நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக கியூ.ஆர் குறியீட்டுடன் (QR) கூடிய புதிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

340 இடங்களில் பெற முடியும்

நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலம்!

இதேவேளை, நாட்டில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள 340 இடங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்திற்கு நிதிப் பிரச்சினைகள் இருப்பதாகவும், ஆனால் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் பல அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவின் முதல் வான் பாலம்: திறந்து வைத்தார் ரணில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version