Home இலங்கை சமூகம் பால் தேநீர் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

பால் தேநீர் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

0

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரை 80 ரூபாய்க்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் முன்வைத்துள்ளார்.

அத்துடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இன்று(25) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பால்மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் சில்லறை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

பால் தேநீர் 

அண்மைக் காலமாக பால்மா விலை உயர்வு காரணமாக பால் தேநீர் அருந்துவதற்கு ஹோட்டல்களுக்கு வருவதை மக்கள் தவிர்த்து வந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறி மீண்டும் 80 ரூபாய்க்கு ஒரு கோப்பை பால் தேநீர் குடிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளதாக அசேல சம்பத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/milk-tea-price-reduction-1714037386

NO COMMENTS

Exit mobile version