Home இலங்கை சமூகம் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு! கித்துல்கலையில் சம்பவம்

இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு! கித்துல்கலையில் சம்பவம்

0

கேகாலை மாவட்டத்தின் கிதுல்கலை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான
முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேகாலை, கித்துல்கல இங்கிரியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த
23 வயதுடைய இளம் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். 

மேலதிக விசாரணைகள்

அத்துடன், இவருக்கு எதிராக நீதிமன்றில் பல வழக்குகள் விசாரணையில் உள்ளதாகவும்
பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/young-family-man-took-bad-decision-in-kegalle-1727209416

NO COMMENTS

Exit mobile version