Courtesy: Sivaa Mayuri
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியாவின் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு தனது முதலாவது உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பித்துள்ளார்.
முன்னதாக இன்று (24.09.2024) வெளியுறவுத்துறை அமைச்சராக ஹேரத் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிகழ்வின் போது, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலதிக பொறுப்புகள்
இதேவேளை, விஜித ஹேரத்துக்கு வெளியுறவுத்துறை உட்பட்ட பல்வேறு அமைச்சுக்களின் பொறுப்புகள் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளன.