Home இலங்கை சமூகம் வடக்கு கடற்றொழில் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர்

வடக்கு கடற்றொழில் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர்

0

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண கடற்றொழில் சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் (Ramalingam Chandrasekaran) இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (23) வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையில் நடைபெற்றுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் உறுதி

இதன்போது, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

இந்தநிலையில், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை படிப்படியாக தான் முன்னெடுப்பதாக கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் உறுதியளித்தார்.

NO COMMENTS

Exit mobile version