Home இலங்கை சமூகம் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சம்பந்தனின் ஓராண்டு நினைவேந்தல்

தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சம்பந்தனின் ஓராண்டு நினைவேந்தல்

0

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் தமிழ் தேசிய
கூட்டமைப்பின் தலைவருமான அமரத்துவமடைந்த இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் ஓராண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு வவுணதீவில் ஞாயிற்றுக் கிழமை (27) இடம்பெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளரும் பிரதேச தமிழரசு கட்சியின் தலைவருமான
த.கோபாலப்பிள்ளை தலைமையில் வவுணதீவு சந்தை கட்டிடத் தொகுதி மண்டபத்தில் இடம்
பெற்றது.

ஈகைச் சுடர் 

இதன் போது இரா. சம்பந்தன் அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்
வைத்து, ஈகைச் சுடர் ஏற்றி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் அஞ்சலி அனுஷ்டிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இரா.
சாணக்கியன், இரா. சிறிநாத், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் கி.
துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும்
பிரதேச சபை தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர்
கலந்து கொண்டனர்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இரா. சாணக்கியன், இரா.
சிறிநாத், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் கி. துரைராசசிங்கம் , தமிழரசு
கட்சியின் வடக்கு கிழக்கு க்கான இளைஞரணியின் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை சேயோன்
போன்றோர் அமரர் இரா. சம்பந்தன் அவர்களின் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தினர்.

NO COMMENTS

Exit mobile version