Home உலகம் எலோன் மஸ்க் தொடர்பாக ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

எலோன் மஸ்க் தொடர்பாக ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

0

பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கை(elon musk) அமெரிக்காவிலிருந்து விரட்டவும் தயங்க மாட்டேன் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump), தற்போது அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலோன் மஸ்க் கண்டிப்பாக தேவை என்று தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  “எலோன் மஸ்க்கிற்கு கொடுக்கப்படும் பெரும் மானியங்களை நிறுத்தி அவரை அழித்துவிடுவேன் என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் அது உண்மை அல்ல.

அமெரிக்கா வளர்ச்சியடைய எலோன் மஸ்க் இருக்கவேண்டும்

எனக்கு எலோன் மஸ்க் மற்றும் அவரது அனைத்து வியாபாரங்களும் அமெரிக்காவிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. முன்பு இருந்ததை விட அது இன்னும் நன்கு செயல்புரிய வேண்டும். அவ்வாறு செயல்படும் போதுதான் அமெரிக்கா வளர்ச்சி அடையும். அவருக்கும் நல்லது, நம் அனைவருக்கும் நல்லது,” என்று ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு எலோன் மஸ்க், “நன்றி” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார்.

 ட்ரம்ப், திடீரென ‘அந்தர் பல்டி’ 

எலோன் மஸ்க்கை இதுவரை கடுமையாக விமர்சித்தும், மறைமுகமாக அச்சுறுத்தியும் வந்த ட்ரம்ப், திடீரென ‘அந்தர் பல்டி’ அடித்து அவர் அமெரிக்காவுக்கு அவசியம் தேவை என்று குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் வாதத்தை கிளப்பியுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version