Home இலங்கை அரசியல் தமிழ்ச் சமூகத்தின் உயர்ந்த ஆளுமையின் மறைவு: வெளிவிவகார அமைச்சர் இரங்கல்

தமிழ்ச் சமூகத்தின் உயர்ந்த ஆளுமையின் மறைவு: வெளிவிவகார அமைச்சர் இரங்கல்

0

தமிழ்ச் சமூகத்தின் அசைக்க முடியாத அரசியல்வாதியும் உயர்ந்த ஆளுமையுமான இரா.சம்பந்தனின் மறைவு ஆழ்ந்த கவலை அளிக்கிறது என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) தலைவர் இரா.சம்பந்தனின் (R. Sampanthan) மறைவையொட்டி தனது “X“ தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், “ஜனநாயகம் மற்றும் அதிகாரப் பகிர்வு மீதான அவரது உறுதியான நம்பிக்கை, எப்போதும் “பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள்” என்றென்றும் எதிரொலிக்கும்.

சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

அவரது நினைவாக, அனைத்து இலங்கையர்களும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு தேசத்தை கட்டியெழுப்ப பாடுபடுவோம்,

நமது பன்முகத்தன்மையை வலிமையின் ஆதாரமாக ஏற்றுக்கொள்வோம். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version