Home இலங்கை அரசியல் இலங்கையில் ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு தகுதியானவர் சம்பந்தன் : பிமல் புகழாரம்

இலங்கையில் ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு தகுதியானவர் சம்பந்தன் : பிமல் புகழாரம்

0

தமிழர் அரசியல் துறையில் மூத்த அரசியல் ஞானியான காலஞ்சென்ற இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothayam Sampanthan) இலங்கையில் ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்பது எனது மனப்பூர்வ நம்பிக்கையாகும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (25) நடைபெற்ற மறைந்த உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணையின் போது உரையைாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “சம்பந்தன் அவர்களுடன் 2001ஆம் தொடக்கம் 2010 வரையும் 2015-2020 வரை எதிர்க்கட்சி உறுப்பினராக பணியாற்ற கிடைத்தது.

அரசியல் கொள்கை

அரசியல்வாதிகள் என்ற வகையில் அவரின் கொள்கை எவ்வாறு இருந்தாலும் பேச்சில் உண்மையை வெளியிட்ட இந்த நாடாளுமன்றத்தில் நான் கண்ட முதல் அரசியல் வாதியாவார்.

அவரின் அரசியல் கொள்கையில் 100 வீதம் எமக்கு ஒன்றித்து செயற்பட முடியாவிட்டாலும் உண்மையில் மதிப்பளிக்க கூடிய ஒரு அரசியல் வாதியாவார்.

எனக்கும் அவருக்கிடையில் வயது மற்றும் அனுபவம் மிக விசாலமானதாக இருந்தாலும், ஒருவரை இழிவுபடுத்தியோ புகழ்ச்சியாகவோ பேசியதில்லை. அதை நாம் நேரடியாக கண்டோம்.

 புதிய அரசியலமைப்பு

2015-2019 வரை புதிய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் அங்கம் வகித்த அவர், 80 முறை கூடிய அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்ட சிரேஷ்ட தலைவர். அத்தோடு திம்பு பேச்சுவார்த்தையின் போது தமிழரை பிரதிநிதித்துப்படுத்தியவர்.

புதிய அரசியலமைப்பு திட்டத்தை நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு தயாரித்தாலும், அது சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று சொன்னது, தமிழ் அரசியல் பரப்பில் நான் பார்த்த சிரேஷ்ட தலைவராவார்.

அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலத்தில் அவரின் நாடாளுமன்ற உரைகள் நேர்த்தியானதாக இருக்கும். அவ்வாறான தகுதிகள் உள்ள தலைவர்கள் எதிர்காலத்தில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை அலங்கரிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/6L84HHjSqA8

NO COMMENTS

Exit mobile version