Home இலங்கை அரசியல் மறைந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்மந்தனின் நினைவு தினம்

மறைந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்மந்தனின் நினைவு தினம்

0

மறைந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்மந்தனின் நினைவு தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

குறித்த நினைவேந்தலில்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண முன்னாள் கல்வியமைச்சர்
தம்பிராஜா குருகுலராஜா ,மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்,
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து
கொண்டனர்.

 விடுதலைப்போராட்டம் 

இரா.சம்மந்தனின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை
அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
உரையாற்றிருந்தார்.

“எங்களுடைய விடுதலைப்போராட்டம் என்பது அஞ்சல் ஓட்டம் போன்றது. தந்தை செல்வா
முதல் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வரை எட்டு தசாப்தமாக தொடர்கிறது.

தேசிய விடுதலை

விமர்சனங்கள் உண்டு அவற்றை எல்லாம் தாண்டி தேசிய விடுதலையை கொண்டு சென்ற
பங்கு சம்மந்தனுக்கு மிகப்பெரியது.

இறுதியாக சாள்ஸ் நிர்மலநாதனும் நானும் இறுதியாக சந்திக்கும் போது அவரின்
அனுமதியுடன் குரல் பதிவு செய்தேன் என் மீதான நடவடிக்கை இறுகுகின்ற போது
வெளியிடுவேன்’’

நினைவாற்றல் நிறைந்தவர் விடயங்களை கேட்டு பதிலளிக்க கூடியவர்” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version