Home சினிமா படிப்பில் டாப்பர், UPSC தேர்வில்.. நடிகை ராசி கண்ணா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்

படிப்பில் டாப்பர், UPSC தேர்வில்.. நடிகை ராசி கண்ணா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்

0

பொதுவாக சினிமா நடிகைகள் என்றால் நடிப்புக்காக படிப்பை பாதியில் விட்டவர்களாக தான் இருப்பார்கள். பல முன்னணி நடிகைகளே அப்படி தான் செய்திருப்பார்கள்.

ஆனால் நடிகை ராசி கண்ணாவின் படிப்பு பற்றிய தகவல் தற்போது சினிமா ரசிகர்கள் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.

படிப்பில் டாப்

ராசி கண்ணா சின்ன வயதில் இருந்தே படிப்பின் மீது தான் முழு கவனத்தையும் செலுத்துபவர். அவர் பள்ளி மட்டுமின்றி ஆங்கில பட்டப்படிப்பிலும் டாப்பர் தான்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் Lady Shriram Collegeல் அவர் படிப்பில் டாப்பில் வந்திருக்கிறார். மேலும் அதன் பின் UPSC தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வரும்போது பார்ட் டைமில் ஒரு ad ஏஜென்சியில் copywriter ஆக அவர் பணியாற்றினாராம்.

அந்த நேரத்தில் அவரை மாடலிங் செய்ய பலரும் கூறி இருக்கிறார்கள். அதன் பின் தான் அவர் மாடலிங் செய்ய தொடங்கி படிப்படியாக சினிமாவிலும் நடிக்க தொடங்கி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version