ரச்சிதா மகாலட்சுமி
நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பின் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
என்னால் அது முடியாது என்று ட்ரோல் செய்தனர்.. ஓப்பனாக சொன்ன நடிகை அனுபமா
கடைசியாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பின் வெள்ளித்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அந்த வகையில், தமிழில் ஃபயர் என்ற படத்தில் நடித்து ரீச் ஆனார். இப்படத்தில் மிகவும் கிளாமராக நடித்திருப்பார்.
அதிரடி முடிவு
இந்நிலையில், தற்போது ஃபயர் படத்தில் நடித்தது போன்று வேறு எந்த படத்திலும் நடிக்க போவது இல்லை என்று ரச்சிதா முடிவு எடுத்துள்ளாராம். இவர் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
