Home இலங்கை அரசியல் அநுர ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை! சபையில் உறுதியளித்த அமைச்சர்

அநுர ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை! சபையில் உறுதியளித்த அமைச்சர்

0

எந்த ஒரு காரணத்திற்காகவும் நாட்டில் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(03.12.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக வேண்டுமென்றே பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், எங்களுக்கெதிராக இனவாதத்தையும் மததீவிரவாதத்தையும் பயன்படுத்தி வாக்கு சேகரிக்க முயற்சித்தனர்.

இனவாதத்திற்கு அனுமதி இல்லை 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் தங்களின் மத நம்பிக்கைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் என கூறியவர்களே தற்போது இனவாதக் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்குவதற்கு அனுமதியளிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version