ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாகன இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு பசி பட்டினியில் இருக்கும்
மக்களுக்கு முதலில் உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் இராதாகிருஸ்ணன் இராஜாராம் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (14.09.2024) நடைபெற்ற மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக இளைஞர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்திருந்த இளைஞர்
மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்ழகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர் கூறுகையில்,
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலையில் கூறினார், வாகன இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று. முதலில் மலையக மக்களுக்கு வாகன இறக்குமதி தேவையில்லை.
மலையக மக்கள்
வாகன இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு பசி பட்டினியில் இருக்கும் மக்களுக்கு உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன இறக்குமதியை செய்து அவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் சூழ்ச்சியையே செய்கின்றார் ரணில் விக்கிரமசிங்க. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் பிரதித்
தலைவரும், மலையக இளைஞர் முன்னணியின் தலைவருமான இராதாகிருஸ்ணன் ராஜாராம்
தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாம் குடும்பத்தின்
பேரனும் சர்வதேச அப்துல் கலாம் அறக்கட்டளையின் ஸ்தாபக இணைத்தலைவருமான டாக்டர்
ஏ.பி.ஜே.எம்.ஜே சேக் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.