Home இலங்கை அரசியல் 1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி : இராதாகிருஷ்ணன்

1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி : இராதாகிருஷ்ணன்

0

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால்
மகிழ்ச்சி என நாடாளுமன்ற உறுப்பினர் மலையக மக்கள்
முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி
இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

இன்றைய தினம் (05) நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து
கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக அதிகரிப்பது தொடர்பில்
தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை
நடைமுறைப்படுத்துவதை தடுத்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்தது.

முட்டாள்தனமான செயற்பாடு

கம்பனிகளோடு எந்தவொரு பேச்சுவாரத்தையும் செய்யமால் வர்த்தமானி வெளியிட்டது ஒரு முட்டாள்தனமான செயற்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தோட்ட தொழிலாளர்ககளை ஏமாற்றம் செயற்பாடகவே உள்ளது தெரிவித்துள்ளார்.

இந்த சம்பள அதிகரிப்பு விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எனது எங்கள் அனைவரினதும் ஆசையாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version