தக் லைஃப்
நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான தக் லைஃப் திரைப்படம் நேற்று வெளிவந்தது. இப்படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்கியிருந்தார். சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், நாசர் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் ஒன்றிணைந்து நடித்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆனாலும் கூட முதல் நாள் உலகளவில் ரூ. 46 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.
மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம்
ரஹ்மானின் மகள்
தக் லைஃப் திரைப்படத்தில் லப்பர் பந்து பட புகழ் நடிகை சஞ்சனா துணை இயக்குநராக பணிபுரிந்து, ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
அதே போல் மற்றொருவரும் இப்படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்து,ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை நடிகர் ரஹ்மானின் சொந்த மகள்.
இப்படத்தில் நாசர் மகளாக நடித்திருந்தவர் நடிகர் ரஹ்மானின் மகள் ஆவார். மேலும் அவர் இப்படத்தில் மணி ரத்னத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
