Home இலங்கை அரசியல் ரணிலிடம் சொல்லப்பட்ட தவறான செய்தி! அழுத்தத்தால் செய்ததாக ஒப்புக்கொள்ளும் தேரர்

ரணிலிடம் சொல்லப்பட்ட தவறான செய்தி! அழுத்தத்தால் செய்ததாக ஒப்புக்கொள்ளும் தேரர்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு அண்மையில்
நடைபெற்ற மத நிகழ்வில், தொடம்பஹல ராகுல தேரர் வெளியிட்ட கருத்து சமூக
ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நிகழ்வில் பேசிய ராகுல தேரர், 2024 – ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக
அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம், எரிபொருட்களை இறக்குமதி செய்ய
வேண்டாம் என்று, தாம் அறிவுறுத்தியதாகக் கூறியிருந்தார்.

சந்திக்க வாய்ப்பு… 

இருப்பினும், அந்தக் கருத்து அந்த தருணத்தின் அழுத்தம் காரணமாக தவறாகச்
சொல்லப்பட்டது என்று தேரர் 2025 மார்ச் 24ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில்
தெளிவுபடுத்தியுள்ளார்.

அந்தச் சூழ்நிலையில், தமது மனதில் ஒரு தெளிவான உதாரணம் இல்லை. அத்தகைய
கோரிக்கையை வைக்க ரணிலை, தாம் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும்
அவர் உள்ளூர் தொலைக்காட்சி நேர்காணலின் போது கூறியுள்ளார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க எப்போதும் இலங்கையில் பௌத்த மதத்தின்
நிலைப்பாட்டை நிலைநிறுத்த பாடுபட்டுள்ளார் என்றும் ராகுல தேரர்
குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version