Home அமெரிக்கா கனடாவுக்கு தப்பிச் செல்ல நினைக்கும் அமெரிக்கர்கள்..! ட்ரம்பின் தொடர் மிரட்டல்கள்

கனடாவுக்கு தப்பிச் செல்ல நினைக்கும் அமெரிக்கர்கள்..! ட்ரம்பின் தொடர் மிரட்டல்கள்

0

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அவர் நாட்டு மக்களில் சிலர், தாங்கள் கனேடிய குடியுரிமையை பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.

ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியானதில் இருந்தே சில நாடுகளுடன் வர்த்தகப் போரில் இறங்கியுள்ளார்.  

அத்துடன், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாக மிரட்டிக் கொண்டே இருக்கிறார்.

அமெரிக்க – கனடா இணைவு 

இந்நிலையில், அவர் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாக மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் நாட்டு மக்களில் சிலரோ, தாங்கள் கனேடிய குடியுரிமை பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.  

அண்மைய ஆய்வொன்றில், அமெரிக்கர்கள் கனடாவுக்குச் சென்று கனேடிய குடியுரிமை பெற விரும்புவது தெரிய வந்துள்ளது.

அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் தாங்கள் கனேடியர்களாக ஆக விருப்பம் தெரிவித்துள்ளதாக குறித்த ஆய்வு கூறுகின்றது. 

இந்த ஆய்வுகளில் பங்கேற்ற அமெரிக்கர்களில் 20 சதவிகிதத்தினர், தங்கள் மாகாணத்தைக் கனடாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.  

அது மாத்திரமன்றி, வெறும் 9 சதவீதமான அமெரிக்கர்கள் மாத்திரமே கனடா அமெரிக்காவுடன் இணைக்கப்படலாம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version