இலங்கையை பொறுத்தவரையில் ஒரே அமெரிக்க விமானங்களின் இரைச்சல் தான் மக்களின் காதுகளை துளைத்துக்கொண்டிருக்கின்றது என்று கூறலாம்.
அதாவது, அமெரிக்க விமானங்கள் மற்றும் படையினர் நிவாரணங்களுடனும், பணிகளுக்காகவும் இலங்கைக்கு வருகை தந்திருந்ததுடன் அவர்கள் பலாலி விமானநிலையத்திலும் தரையிறங்கியிருந்தனர்.
வடக்கு,கிழக்கு அடங்கலாக அநுராதபுரத்திலும் விடமானங்கள் தரையிறங்கி சென்றுள்ளன.
அதனை பேரிடர் மீட்பு பணி என்பதா அல்லது அமெரிக்கா தன்னுடைய இராணுவ மேலாண்மையை நிருபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக பார்கின்றதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தநிலையில், ட்ரம்பின் ஆட்சியானது வெனிசுலாவை மையப்படுத்தி ஒரு தீவிர ராணுவ களத்தை திறந்து விட்டுள்ளது.
இந்த இராணுவ களத்தினை கையாளுவதற்கு ரஸ்யா- சீனாவினுடைய பின்புல முயற்சிகளும் உள்ளன.
எனவே வெனிசுலாவை ட்ரம்ப் கையக்ப்படுத்துவாரைாக இருந்தால் தாய்வானை சீனா கையப்படுத்துவதை தடுப்பது கடினமாகிவிடும்.
எனவே இதனை எதிர்கொள்வதற்கு இந்து -ஆசிய பசுபிக் கமான் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றது,
அதில் இலங்கை தற்போது முக்கிய வகிபாகத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்து என்று
கனடாவில் இருக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..
