Home இலங்கை சமூகம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் முக்கிய வீதி: சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு

இரண்டு நாட்களுக்கு மூடப்படும் முக்கிய வீதி: சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு

0

 குருணாகல் – புத்தளம் (Puttalam) வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை தொடருந்து திணைக்களம் இன்று (7) அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

புத்தளம்- 55ஆம் கட்டையில் உள்ள தொடருந்து கடவையில் திருத்தப்பணிகள் நடைபெறவுள்ள காரணத்தினாலேயே குறித்த வீதி மூடப்படவுள்ளது.

சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதால் நாளை சனிக்கிழமை (08) மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (09) குருணாகல் – புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி மீண்டும் மூடப்படும்.

நேற்றைய தினமும் திருத்தப்பணிகளினால் இந்த வீதி மூடப்பட்டது.

இந்த நடவடிக்கையால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அசௌகரியத்தை குறைத்து கொள்வதற்கும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version