Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் நீதிமன்றால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில்..!

கிளிநொச்சியில் நீதிமன்றால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில்..!

0

கிளிநொச்சி (Kilinochchi) மேல் நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
ஏலவிற்பனை செய்தல் நாளைய தினம் ஏலத்தில் விடப்படவுள்ளன. 

இது தொடர்பில், கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விற்பனை நடவடிக்கை 

குறித்த அறிக்கையின் படி, பறிமுதல் செய்யப்பட்டதும் இதுவரை உரிமை கோரப்படாததுமான வாகனங்கள் நாளை (08.02.2025) காலை 9.00 மணிக்கு நீதிமன்ற வளாகத்தினுள் பகிரங்க ஏல விற்பனை மூலம் விற்கப்படவுள்ளன. 

மேலும், ஏலவிற்பனைக்கு உட்படுத்தும் பொருட்களை உரிமை கோருபவர்கள் யாராவது இருக்குமிடத்து ஏலவிற்பனை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னர் தமது கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது, ஏலவிற்பனைப் பொருட்களை, ஏலவிற்பனை ஆரம்பமாவதற்கு அரை மணித்தியாலயத்திற்கு முன்னர் இம்மன்றின் பதிவாளரின் அனுமதியுடன் பார்வையிட முடியும் எனவும் நீதிமன்ற வளாகம் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version