Home இலங்கை குற்றம் தொடருந்து இணையத்தள பயணச்சீட்டு மோசடி! பணியாளர் ஒருவர் இடைநிறுத்தம்

தொடருந்து இணையத்தள பயணச்சீட்டு மோசடி! பணியாளர் ஒருவர் இடைநிறுத்தம்

0

இணையத்தளம் வழியாக தொடருந்து பயணச்சீட்டு முன்பதிவு விடயத்தில் மோசடி செய்த குற்றச்சாட்டில் தொடருந்து பணியாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசத்துக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் அதற்காக தொடருந்து பயணங்களையே தெரிவு செய்கின்றனர்.

இந்நிலையில், கொழும்பு – எல்ல இடையேயான தொடருந்து பயணச்சீட்டு இணையத்தள முன்பதிவில் பாரிய மோசடியொன்று நடைபெறத் தொடங்கியிருந்தது.

முறைப்பாடு பதிவு 

குறிப்பிட்ட நாளொன்றின் இணையத்தள முன்பதிவுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட 42 செக்கன்களுக்குள் அனைத்து பயணச்சீட்டுகளும் முன்பதிவு செய்யப்படும் நிகழ்வு அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

இது தொடர்பாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மாகும்புற தொடருந்து நிலைய ஊழியர் ஒருவரே குறித்த மோசடி சம்பவத்தை மேற்கொண்டிருந்தமை விசாரணைகளில் தெரிய வந்திருந்தது.

அதனையடுத்து, தற்போது அவர் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களை கண்டறியும் வகையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version