Home சினிமா பெரிய உதடுகளால் நான் பட்ட அவமானம்… வருத்தமாக பேசிய நடிகை பூமிகா

பெரிய உதடுகளால் நான் பட்ட அவமானம்… வருத்தமாக பேசிய நடிகை பூமிகா

0

நடிகை பூமிகா

நடிகை பூமிகா, தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த பிரபலம்.

சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம், பத்ரி படங்கள் மூலம் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தார். தமிழ் மட்டுமில்லாது போஜ்புரி, பஞ்சாபி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் 24 வருடங்களாக நடித்து வருகிறார்.

நாயகியாக நடித்து அசத்தி வந்தவர் இப்போது அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகையின் பேட்டி

கடைசியாக இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் திரைப்படத்தில் அவரின் அக்காவாக நடித்திருந்தார். இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, சிறு வயதில் தனக்கு நடந்த கேலி மற்றும் கிண்டல் குறித்து பேசி உள்ளார்.

அதில், என் உதடுகள் பெரியதாக இருந்ததால் சிறுவயதில் என்னை பலர் கேலி, கிண்டல் செய்தார்கள்.

இதனால் மன வேதனை அடைந்து பல நாட்கள் அழுது இருக்கிறேன், ஆனால், இப்போது அந்த பெரிய உதடுகள் தான் என்னுடைய அடையாளமாக இருக்கிறது என கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version