Home முக்கியச் செய்திகள் அடுத்த 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை

அடுத்த 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை

0

அடுத்த 24 மணித்தியாலத்தில் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் (metrology department)எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று(17) பிற்பகல் ஒரு மணிக்கு வெளியிடப்பட்ட சிவப்பு வானிலை எச்சரிக்கை நாளை(18) பிற்பகல் ஒரு மணி வரை நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

150 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி , மாத்தறை , கண்டி , நுவரெலியா மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

வளிமண்டலத்தில் காணப்படும் குழப்ப நிலை

இதேவேளை இலங்கையை அண்மித்த தாழ் வளிமண்டலத்தில் காணப்படும் குழப்ப நிலை காரணமாக நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.   

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

NO COMMENTS

Exit mobile version